கிருஷ்ணதேவராயன் | Krishnadevaraya
Description
இவரைப் பற்றி எழுதப்பட்டவற்றிலிருந்து, இவர் நடுத்தர உயரம் உடையவராக இருந்தார் என்றும், மகிழ்ச்சியான பண்புகளைக் கொண்டிருந்தார் என்றும் அறியப் படுகிறது. இவர் வெளிநாட்டு விருந்தினரை மதித்தார், சட்டத்தைப் பேணுவதில் கடுமையாக இருந்த இவர், அன்றாடம் பயிற்சி செய்வதன் மூலம் தனது உடற் தகுதியை உயர்ந்த நிலையில் வைத்திருந்தார். கிருஷ்ணதேவராயர் ஒரு சிறந்த நிர்வாகியாக மட்டுமன்றிச் சிறந்த தளபதியாகவும் விளங்கினார். தானே படைகளை முன்னின்று நடத்தியதோடு, காயமடைந்தவர்களுக்குத் தானே உதவும் பண்பும் அவரிடத்திற் காணப்பட்டது. இவரைப் பற்றி இந்த பகுதியில் கேட்டு தெரிந்து கொள்வோம்.
Comments