Description
இந்த போட்காஸ்ட் , பல பேர் உழைக்கின்றனர் ஆனால் வெகு சிலரை விடாமுயற்சியுடன் உழைத்து சாதிக்கின்றனர் . அப்படி நாம் உலகில் சிகரத்தை தொட்ட மனிதர்களை பற்றிய தொகுப்பு.
6 Episodes
access_time4 years ago
அன்னை என்றாலே அன்பும், அரவணைப்பும் என்பது அனைவரும் அறிந்ததே. அதற்கு முன்னுதாரணமாக திகழ்ந்தவர், அன்னை தெரசா. ஏழை,எளியோருக்கு சேவை செய்யும் நோக்கில் இந்தியாவுக்கு வந்த அவர், மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் ஆசிரியராக தனது பணியை தொடங்கினார். பின்னர் முழு நேர தொண்டாளராக மாறிய தெரசா, வீட்டில் புறக்கணிக்கப்பட்ட நபர்களுக்கும், தீர்க்க முடியாத நோய்களால் அவதிப்பட்டவர்களுக்கு ஆறுதலாகவும் விளங்கினார்.
access_time4 years ago
முகம்மது அலி, ஓய்வுபெற்ற தலைசிறந்த அமெரிக்க குத்துச்சண்டை வீரரும் மூன்று முறை மிகுஎடை உலக வெற்றி வீரரும் ஆவார். உலகிலயே தலைசிறந்த மிகுஎடை குத்துச்சண்டை வெற்றி வீரராக கருதப்படுபவர். தொடக்க காலங்களில், ரோமில் 1960 ஆம் ஆண்டு நடைபெற்ற 1960 ஒலிம்பிக்கு மெல்லிய மிகுஎடை பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார். தொழில் நெறிஞர் ஆனப்பின் தொடர் மிகுஎடை வெற்றிகள் மும்முறை பெற்ற ஒரே வீரர் ஆனார்.
access_time4 years ago
சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின் இயற்பெயர் கொண்ட சார்லி சாப்ளின், ஹாலிவுட் திரையுலகின் பெரும் புகழ்பெற்ற கலைஞர். இவருக்கு நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், திரைப்படத் தொகுப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர் என்று பல முகங்கள் உள்ளன.
access_time4 years ago
வில்லியம் ஹென்றி கேட்ஸ் மைக்ரோசாப்ட் நிறுவனர்களில் ஒருவர். இவர் அதன் தலைமை கணிப்பொறி மென்பொருள் வல்லுனராகவும் (CSA), முதன்மை செயல் அதிகாரியாகவும் (CEO) பணியாற்றியுள்ளார். கோர்பிஸ் நிறுவனத்தினையும் நிறுவியுள்ளார். போர்பஸ் இதழின்படி உலகின் முதல் பணக்காரர் என்று அறியப்படுகிறார். உலகின் பெரும் செல்வந்தர்கள் பட்டியலில் தொடர்ந்து பன்னிரெண்டு ஆண்டுகளாக முதல் இடத்தில் இருந்தார் . 1999-ல் இவரின் குடும்பச் சொத்து மதிப்பு 100 பில்லியன் டாலர்களைக் கடந்தது.
access_time4 years ago
ஆபிரகாம் லிங்கன் ஐக்கிய அமெரிக்காவின் 16 வது குடியரசுத் தலைவர் ஆவார். இவர் அடிமை முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அதனை ஒழிக்க முனைந்தவர்களில் ஒருவர். 1860ல் மேற்கு மாநிலங்களில் தலைவராக இருந்த இவர் குடியரசுக் கட்சியின் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அமெரிக்காவின் குடியரசுத் தலைவராக வெற்றி பெற்றார்.
access_time4 years ago
நெல்சன் மண்டேலா, தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் ஆவார். அதற்கு முன்னர் நிறவெறிக்கு எதிராகப் போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவராக இருந்தார்.