add_circle Create Playlist
புனித வார சிலுவைப்பாதை | Holy Week Way Of The Cross - Raaga.com - A World of Music

புனித வார சிலுவைப்பாதை | Holy Week Way Of The Cross

Glitz Digital

Description

இயேசு கிறிஸ்துவின் பாடுகளை தியானிக்கும் தவக்கால சிலுவை பாதையில் நீங்களும் இணைந்து அவரின் கல்வாரி பாதையை இப்பதிவின் மூலம் கேட்டு அவரோடு  பயணிக்கலாம் . இயேசுவின் பாடுகளின் போது அவரோடு நீர் உடனிருந்து, அவருடைய பாடுகளில் பங்கேற்றது போல, நாமும் பங்கேற்று இதில் தியானிப்போம் 

24 Episodes Play All Episodes
%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81+%7C+EASTER+SUNDAY+IN+TAMIL
access_time4 years ago
உயிர்ப்பு ஞாயிறு (Easter), ஆண்டவரின் உயிர்ப்புப் பெருவிழா அல்லது பாஸ்கா என்பது இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு அடக்கம் செய்யப்பட்டு மூன்றாம் நாள் சாவில் இருந்து உயிர்த்ததைக் குறிக்கும் விதமாக கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படும் ஒரு திருவிழா ஆகும். இது ஒவ்வொரு ஆண்டும் 40 நாட்கள் தவக்காலத்தின் முடிவில் வருகிறது. இது கிறிஸ்தவ திருவழிபாட்டு ஆண்டின் மிக முக்கியமான திருநாளாகும். இந்நாள் புனித வெள்ளியில் இருந்து மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது அவற்றை இப்பதிவில் கேட்டு தியானிப்போம்.
%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4+%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF+%7C+HOLY+SATURDAY+IN+TAMIL
access_time4 years ago
புனித சனி (Holy Saturday) என்பது கிறித்தவ வழிபாட்டு ஆண்டில் பெரிய வெள்ளிக் கிழமைக்கு அடுத்த நாள் ஆகும். இது புனித வாரத்தின் கடைசி நாளாகவும், தவக் காலத்தின் கடைசி நாளாகவும் இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குத் தயாரிப்பு நாளாகவும் கருதப்படுகிறது. கல்லறையில் வைக்கப்பட்ட இயேசுவின் உடல் அமைதியில் துயில் கொள்ளும் வேளையில் திருச்சபையும் அமைதியோடு காத்திருக்கும். இயேசுவின் இறப்பு துயர நிகழ்வாக இருந்தாலும் அத்துயரமானது மகிழ்ச்சியாக மாறப்போகிறது என்னும் நம்பிக்கையோடு திருச்சபை காத்திருப்பது பெரிய சனியின் பண்பு. திருவழிபாட்டு முறைக்கு ஏற்ப, பெரிய சனி பொழுது சாயும் வேளை வரை நீடிக்கும். அதன் பிறகு பாஸ்கா திருவிழிப்பு (Easter Vigil) தொடங்கும். அதுவே இயேசு சாவினின்று எழுந்த நிகழ்ச்சிக்கு முன்னோடி போல அமைகிறது அதனை  இப்பதிவில் கேட்டு தியானிப்போம். 
%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF+%7C+GOOD+FRIDAY+IN+TAMIL
access_time4 years ago
புனித வெள்ளி அல்லது பெரிய வெள்ளி அல்லது ஆண்டவருடைய திருப்பாடுகளின் வெள்ளி (Good Friday) என்பது கிறிஸ்தவர்கள் இயேசு கிறித்து அனுபவித்த துன்பங்களையும்,  சிலுவைச் சாவையும் நினைவுகூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுகின்ற ஒரு விழா ஆகும். கிறித்தவ வழிபாட்டு ஆண்டில் முக்கியமான இந்த நாள் இயேசு உயிர்பெற்றெழுந்த ஞாயிறு கொண்டாட்டத்திற்கு முந்திய வெள்ளிக்கிழமை நிகழும். இயேசு கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூர்கின்ற நிகழ்வை இப்பதிவில் கேட்டு தியானிப்போம்.
%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D+%7C+MAUNDY+THURSDAY+IN+TAMIL
access_time4 years ago
பெரிய வியாழன் அல்லது புனித வியாழக்கிழமை (Holy Thursday - Maundy Thursday) என்பது கிறித்தவர்கள் இயேசு கிறித்துவின் இறுதி நாள்களை நினைவுகூர்ந்து உயிர்ப்பு ஞாயிறுக்கு முன் வரும் வியாழன் அன்று கொண்டாடுகின்ற ஒரு விழா ஆகும். நற்செய்திகளில் கூறியுள்ளது போன்று, திருத்தூதர்களுடனான இயேசுவின் இறுதி இராவுணவு, மற்றும் கால்களைக் கழுவுதல் என இவ்விரவு கடைசித் தடவையாக இயேசு தனது சீடர்களுடன் கழித்த நாளாகும். அவர் நடக்கவிருக்கும் நிகழ்வுகளையும் அவர்களுக்குக் கூறினார் அவற்றை இப்பதிவில் கேட்டு தியானிப்போம்.
%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88+%7C+HOLY+WEEK+WEDNESDAY+IN+TAMIL
access_time4 years ago
அடிப்பதற்கு இழுத்துச் செல்லும் ஆட்டுக்குட்டிையப் போல், உங்கள் முன் வாயில்லா பூச்சியாய் வதங்கி நின்று ெகாண்டிருக்கும் இயேசுவை தெரிகிறதா  உலகை   மீட்க பரம தந்தையால் இவ்வுலகிற்கு அனுப்பப்பட்ட மானுட மகன் சிரேமற் கொண்டு, நமக்கு இந்த காலகட்டத்தில் சொல்ல வருவது என்ன என்பதை இப்பதிவில் கேட்டு தெரிந்து கொள்வோம். 
%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D++%7C+HOLY+WEEK+TUESDAY+IN+TAMIL
access_time4 years ago
ஈராயிரம் ஆண்டுகளாய் விடுதலைக்காய், வாழ்வின் விடியலுக்காய் ஏழை எளிய மக்களுக்கு நம்பிக்கையும், புத்துயிரையும் கொடுப்பதாகவும் அமைகிறது. பட்டங்களையும், பதவிகளையும் எதிர்பார்த்து இயேசுவின் பின் சென்றால் அவரின் பயணத்தில் நிச்சயம் நமக்கு இடமிருக்காது. இயேசுவைப்போல நாமும் தன்னலப் போர்வையை தகர்த்தும், ஆணவத்தை அழித்தும் இயேசுவின் பின் பயணிப்போம். அப்போது இப்புனித வாரம் நம்மை புனிதர்களாக நிச்சயம் மாற்றும் என்ற மனநிலையோடு இப்பதிவை கேட்டு தியானிப்போம். 
%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%7C+HOLY+WEEK+MONDAY+IN+TAMIL
access_time4 years ago
புனித வாரம் முழுவதுமே நமது சிந்தனைக்காக இயேசுவின் தற்கையளிப்பை எடுத்துக்கொள்வோம். பொதுவாகவே, ஒரு மனிதர் எப்படி வாழ்கிறாரோ, அப்படித்தான் இறக்கிறார். இயேசுவும் அப்படியே அவர் வாழ்ந்தபோது, தன்னை முழுமையாக இறைவனுக்குக் கையளித்தார். ஆகையால் நாம் இறைவனோடு எப்படி உள்ளோம்  என்பதை இப்பதிவில் கேட்டு தெரிந்து கொள்வோம். 
%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81+%7C+Palm+Sunday+In+Tamil
access_time4 years ago
 நாற்பது நாள் தவக்காலத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாகக் கருதப்படுவது குருத்தோலை ஞாயிறு. புனித நூலான விவிலியம் என்னும் பைபிளில் சொல்லப்பட்டபடி, இயேசுகிறிஸ்து துன்பத்துக்கு ஆளாகி இறப்பதற்கு ஏறக்குறைய ஒரு வாரத்துக்கு முன் எருசலேம் நகருக்குள்  ஒரு கழுதைக் குட்டியின்மேல் ஏறி அமர்ந்து வந்தார். இயேசுகிறிஸ்து மனித குலத்துக்குத் தாழ்மையைக் கற்றுத் தருவதற்காக எருசலேம் நகரில் கழுதையின்மேல் பவனியாக வந்ததைக் குறிக்கும் வகையிலேயே இந்தக் குருத்தோலை பவனி நடைபெறுகிறது அதை இப்பதிவில் கேட்டு தியானிப்போம் 
10+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88+%7C+10+Minutes+Way+Of+The+Cross+In+Tamil
access_time4 years ago
இரெவல்லாம் கசையால் அடித்து, காறி உமிழ்ந்து, குற்றுயிராய்  பிலாத்துவின் அரண்மைனக்கு இழுத்துச்  காட்சியை தியானிக்க வாருங்கள்  இயேசுவின் சிலுவை பாதையை 10 நிமிடத்தில் தியானிக்க இப்பதிவை கேட்போம் 
14.+%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81+%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%7C+Jesus+is+laid+in+the+Holy+Sepulcher
access_time4 years ago
இயேசுவின் மரித்த உடலுக்கு மரியா தம் மடியில் புகலிடம் அளித்தார். மரியன்னையின் புகலிடம் அடைந்த இயேசுவின் உடல், இப்பொழுது பூமியில் விதைக்கப்படுகிறது. கோதுமைமணி மண்ணில் விழுந்து மடிந்தால்தான் பலன் தரும் என்று கூறிய இயேசு தன்னையே பிறருக்காக அழித்துக்கொண்டார். நாம் நமது சுயநலத்திற்காக மடிய வேண்டும். நம்மையே அழிக்க வேண்டும். அப்போதுதான் பிறருக்கு வாழ்வளிக்க முடியும் என்பதனை இப்பதிவில் கேட்டு தெரிந்து கொள்வோம் 
13.+%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%7C+Jesus+is+taken+down+from+the+cross
access_time4 years ago
குழந்தையாக இயேசுவைத் தனது அன்புக் கரங்களில் ஏந்திய அன்னை மரியாள் இன்று வாடி வதங்கி துவண்டு கிடக்கும் அவரது உடலைத் தாங்கி பிடிக்கிறாள். யாரால் இத்தகைய நிலையைத் தாங்கி கொள்ளமுடியும். எத்தனை முறை பத்து மாதம் சுமந்து பெற்ற தாயையும் தந்தையையும் சொல்லாலும் செயலாலும் புண்படுத்தியிருக்கிறோம். நம் வாழ்விற்க்காக தம் மகனைத் தந்து எங்களுக்கு சான்று பகர்ந்த எங்கள் வியாகுல அன்னையைப் பின்பற்றி வாழ வரம் தாரும். ஆமென்.
12.+%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%7C+Jesus+dies+on+the+cross
access_time4 years ago
நண்பகல் தொடங்கி நாடெங்கும் மூன்று மணிக்கு இருள் உண்டாயிற்று அப்பொழுது இயேசு 'என் கடவுளே, என் கடவுளே ஏன் என்னை கைவிட்டீர்'' என்பது பொருள். சிலுவையும் ஆணிகளும் இயேசுவைக் கொல்லவில்லை. மாறாக மனிதர்களின் பேச்சு அவரைக் கொன்றது.  உயிர்விடும் தறுவாயிலும் கூட துன்புறுத்தியவர்களுக்காக  தந்தையிடம் மன்னிப்பு கேட்கிறார். இன்று நம்மில் எத்தனைப் பேர் இப்படி இருக்கிறோம். அவருக்காக நாம் என்ன செய்துதுள்ளோம் என்பதை இப்பதிவில் கேட்போம்.  
11.+%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%7C+Jesus+is+nailed+to+the+cross
access_time4 years ago
புதுமைகள் பல செய்த கைகளில், புண்கள் ஆற்றிய கைகளில், புண்ணிய வழிகாட்டிய கைகளில் கொடுமையான கோரமான ஆணிகள் துளைக்க அதனால் இயேசு துடிதுடிக்க வேதனையும் துன்பமும் அடைந்தார். நாம் எத்தனை ஆணிகளால் இன்றும் இயேசுவை அறைந்து கொண்டிருக்கின்றோம். சாதி, மதம், லஞ்சம், ஊழல், பதவி வெறி, பழித்தூற்றல், வரத்தட்டசனை, தீண்டாமை, வறுமை, ஏற்றத்தாழ்வு, என்று எண்ணற்ற ஆணிகளால் இயேசுவை இன்றும் அறைந்துக்கொண்டிருக்கிறோம் என்பதை இப்பதிவில் கேட்டு தெரிந்து கொள்வோம். 
10.+%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81+%7C+Jesus+Is+Stripped+Of+His+Garments
access_time4 years ago
கசியும் இரத்தத்தோடு ஒட்டியிருந்த அந்த ஆடைகள் கூறும் செய்திகளைக் கேளுங்கள். ஆடையில்லாதவன் அரை மனிதன் என்று நாம் கூறுகிறோம். ஆனால் இயேசு நமக்காகப்பட்ட வேதனைகளால் அவரது அழகான உடல் அடைந்த புண்களை அந்த ஆடைகள் மறைத்து விட்டன! ஆதலால் அது களையப் படுகிறது. அடக்குமுறைகளை எதிர் கொண்டு என்றும் அவரின் சாட்சிகளாக நிற்க நீங்கள் தயாரா என்பதை இந்நிகழ்ச்சியில் கேட்டு தெரிந்து கொள்வோம் 
9.+%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%87+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%7C+Jesus+falls+beneath+His+cross+the+third+time
access_time4 years ago
கடின உழைப்புக்கு ஈடு இணையேதுமில்லை என்று தனது பாடுகளின் வழியாக சிறப்பான பாதையைக் காண்பித்திருக்கின்றார். கீழே விழுந்த இயேசு உன்னைப் பார்த்து: நீ விழும் போதெல்லாம் நானும் எழுகிறேன் காரணம் நீ கடக்க வேண்டிய தூரம் இன்னும் இருக்கு என்பதற்காய், மனிதமே இதோ நீ தடைகள் வரும் போது முடங்கி போன முதுகெலும்பற்ற மனிதனாய் இருந்த தருணங்களை எண்ணிப்பார்.இந்த பதிவில் உள்ள நிகழ்ச்சியை கேட்பதன் மூலமாக தியானிப்போம். 
8.+%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%7C+Jesus+consoles+the+women+of+Jerusalem
access_time4 years ago
இயேசுவுக்கான கொடிய பாதையில் ஆறுதல் அளிப்பவர்களாக அங்கே கல்வாரிப் பாதையில் எருசலேம் பட்டணத்துப் பெண்கள் இயேசுவுக்கு ஆறுதல் கூறுகின்றனர். ஏனெனில் அவர்களின் குழந்தைகளை அரவணைத்திருந்த கரம் பற்றியிருப்பது சிலுவை மரத்தை. அந்த அன்புக் கரத்தை துளைக்க இருப்பது கொடூரமான ஆணிகள். இவையனைத்தையும் கண்டு ஆறுதல் அளிக்க வருகின்றார்கள் அந்த பெண்கள். ஆனால் நமக்கு ஆறுதல் அளிப்பவர் என்ன சொல்லுகிறார் என்பதை இந்நிகழ்ச்சியில் கேட்டு தெரிந்து கொள்வோம் 
7.+%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%87+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%7C+Jesus+falls+beneath+His+cross%2C+the+second+time
access_time4 years ago
சிலுவையின் பாரம் மேலே உடலை அழுத்த கற்களும் முற்களும் கீழே கால்களின் பாதங்களைத் துளைக்க உடல் இளைக்க கால்கள் சோர நடை தள்ளாட கீழே விழுகின்றார். இயேசுவின் வாழ்க்கைப்பாதையில் இன்னல்கள் துன்பங்கள், வேதனைகள் பல இருப்பினும் மனம் சோரவில்லை. நம்பிக்கை இழக்கவில்லை எழுகின்றார். ஆனால் நாம் எவ்வாறு வாழ்கின்றோம் நாம் என்ன செய்ய முன்வர வேண்டும் என்பதை இப்பதிவில் கேட்போம்.
6.+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE+%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D++%7C+Veronica+wipes+the+face+of+Jesus
access_time4 years ago
மாபெரும் குற்றவாளியாக கல்வாரி மலையை வியர்வையும் இரத்தமும் வழிந்தோடுவதை வேடிக்கைப் பார்க்கின்றனர். ஆனால் வெரோனிக்காள் என்ற பெண் இயேசுவின் முகத்தைத் துடைக்கத் துணிவு கொண்டாள். பார்ப்பவர்கள் என்ன சொல்வார்களோ? பாவி என்று ஒதுக்கி விடுவார்களோ? என்று எண்ணவில்லை. மற்றவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் அநீதிகளை கண்டு நம்முடைய வாழ்க்கையில் என்ன செய்யவேண்டும் என்பதை இப்பதிவில் கேட்போம். 
5.+%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%7C+Simon+of+Cyrene+helps+Jesus+to+carry+the+cross
access_time4 years ago
இயேசு நம்மை பார்த்து உன் சகோதரனையும் நேசி. சின்னஞ்சிறியவர்களுக்கு செய்த போதெல்லாம் எனக்கே செய்தாய் என்று சொன்னவர் இயேசு. நீ துனபத்தில் தவறும் சகோதரனாகியா இயேசுவுக்கு எத்தனை முறை உதவியுள்ளாய்?  எதையும் தட்டிகேட்கும் உரிமை இருந்தும் உரிமையை இழந்தவர்களாக வாழ்ந்து இருக்கிறோம். சீமோன் இயேசுவுக்கு உதவியது போல வாழ்க்கையில் நாம் செய்ய தவறிய உதவிகளை இப்பதிவில் கேட்டு தெரிந்துகொள்வோம் 
4.+%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%7C++Jesus+meets+his+Blessed+Mother
access_time4 years ago
தன் மகனின் துன்ப வேதனையில் தியாக வேள்வியில் பங்கேற்கும் தாய் பிறப்பில் காத்து ஏழ்மையில் வளர்த்து ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை வாழ்வுக்காக சென்று வா மகனே வென்று வா என்று வழியனுப்பி சிலுவை பயணத்தில் தொடந்து வந்து தன் மகனின் இலட்சிய பயணத்தில் அவரின் அன்னை துணை வருகிறாள். அன்னை மரியாள் வேதனையோடு கண்ணீர் வடித்தாலும் கடவுள் சித்தம் இதுவென மௌனம் சாதிக்கிறாள். அந்த தியாகத்தை இப்போது கேட்கலாம்.
3.+%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%87+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%7C+Jesus+falls+for+the+first+time
access_time4 years ago
இயேசு விழுந்த நிலையிலும் எழுந்து சொன்னார்: தளர்ந்து போன கைகளைத் திடப்படுத்துங்கள் உள்ளத்தில் உறுதியற்றவர்களை நோக்கி திடம் கொள்ளுங்கள் அஞ்சாதிருங்கள். இயேசுவை விழுந்த நிலையில் எப்படி நம்மை வாழ சொல்லுகிறார் என்பதை இப்பதிவில் கேட்கலாம் 
2.+%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%7CJesus+is+laden+with+the+Cross
access_time4 years ago
இயேசு நாதரின் தோள்மேல் சிலுவையைச் சுமத்துகிறார்கள்.பாரச் சிலுவையை பரிதாபமாகச் சுமக்கும் இயேசுவை பாருங்கள். இந்த சிலுவை பழங்காலத்தில் அவமானத்தின் சின்னமாக கருதப்பட்டது. பலராலும் இழிவாக கருதி ஒதுக்கப்பட்டது. ஆனால் இயேசு இந்த சிலுவையைச் சுமந்த பிறகுதான் அதற்கு மேலும் பெருமை சேர்கிறது. அது அவமானத்தின் சின்னத்திலிருந்து புனித சின்னமாக மாற்றப்படுகிறது. ஏன் அவர் மேல் இந்த சிலுவை என்பதை இந்த பதிவில் கேட்கலாம் 
1.+%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3+%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%7C+Jesus+is+condemned+to+death
access_time4 years ago
இயேசுவுக்கு சிலுவை மரண தண்டனையை ஆளுநர் பிலாத்து விதிக்கிறார்.இயேசு நாதரைச் சாவுக்குத் தீர்வையிடுகிறார்கள். இதனை நம் வாழ்க்கையோடு ஒப்பிட்டுப்பார்த்து நாம் அவரின் பாடுகளின் முதல் நிலையை தியானிக்க இப்பதிவினை கேட்கலாம்.
%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%7C+Way+Of+The+Cross+Introduction
access_time4 years ago
இயேசு கிறித்து துன்பங்கள் அனுபவித்து உயிர் துறந்த பாதையில் நடந்து செல்ல தவக்காலம் நம்மை அழைக்கிறது. இயேசு அனுபவித்த துன்பங்களை நினைவுகூர்ந்து, தியானித்து, இறைவேண்டல் செய்ய மொத்தம் பதினான்கு நிலைகள் தியானிக்க இந்த சிலுவைப்பாதையின் முன்னுரையாக இப்பதிவினை கேட்போம் 
Comments
See this page in...
Raaga App
Open
Browser
Continue